அரசாங்கம் மேற்கொண்டுள்ள மத மறுமலர்ச்சி திருப்தியாக இல்லை: ஞானசார தேரர்

Thermo-Care-Heating

gnasera_Therarஅரசாங்கம் மேற்கொண்டுள்ள மத மறுமலர்ச்சி திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி அலங்காரம் என்ற போர்வையில் அரசாங்கம் இந்திய காலணியாக இலங்கையை மாறச் செய்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள மத மறுமலர்ச்சி திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்கால அனர்த்தங்களுக்கான ஓர் முன் எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவது தொடர்பான விடயத்தை பல கோணங்களில் பார்க்க வேண்டும்.இது திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகம் தேசப்பற்றாளர்களுக்கு இருக்கின்றது என்றும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment