இலங்கையர்கள் உட்பட 764 அகதிகள் இத்தாலியக் காவல் படையால் மீட்பு

ekuruvi-aiya8-X3

764_agathi_05இத்தாலியக் கடலோரக் காவல் படையினரால் மெடிற்றரேனியன் கடலில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்துள்ளன. மத்திய மெடிற்றரேனியன் கடலில் நேற்று முன்தினம் இந்த மீட்புப்பணி இடம்பெற்றுள்ளன.

ஆறு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அதில் இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த 764 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு, டிசியோற்றி என்ற கப்பலின் மூலம், தென்பகுதித் துறைமுகமான ரெக்கியோ கலாப்ரியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றும் இத்தாலிய கடலோரக் காவல்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

படகில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் இலங்கை, சிரியா, ஜோர்தான். ஏமன், மொராக்கோ, நேபாளம், அல்ஜீரியா, எகிப்து, பங்களாதேஷ;, லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment