சுற்றுச்சுழல் திணைக்களத்தின் முக்கிய அறிவுறுத்தல்

Facebook Cover V02

pani2212கனடாவின் ரொறொன்ரோ மற்றும் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்கள் ஆழமான உறைபனி நிலை காணப்படும் என்பதால் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச்சுழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில், வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே இரட்டை இலக்கங்களில் காணப்படும் என்பதனால், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஒன்ராறியோவின் வடபகுதி மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் தொடர் குளிர் வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டாவின் பெரும் பகுதிகள், மனிரோபா, சஸ்கற்சுவான் மற்றும் கியுபெக் ஆகிய பகுதிகளில் குளிர்விக்கும் காற்றுடன் கூடி வெப்பநிலை -40 அல்லது இதற்கும் கீழாக வீழ்ச்சி அடையலாம் என எச்சரிக்கப்படுகின்றது.

நியு பவுன்லாந்தின் பெரும் பகுதிகள் மற்றும் லப்ரடோர் ஆகிய இடங்களிலும் காற்று மற்றும் பனிப்புயல் அத்துடன் பறக்கும் பனி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

Share This Post

Post Comment