கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்: விரைவில் கைச்சாத்து

ekuruvi-aiya8-X3

can_Europeகனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான உடன்படிக்கை எதிர்வரும் சில நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இன்று (வியாழக்கிழமை) பிரஸ்ஸல்ஸிற்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், பேச்சுவார்த்தைகள் இழுபறியில் காணப்பட்டதால் அவரது பயணம் தடைப்பட்டது. அதன்படி எதிர்வரும் தினங்களில் இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐரோப்பா தயாரெனில் இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா எந்த தருணத்திலும் தயாராக இருப்பதாக கனடிய வர்த்தக அமைச்சரின் பேச்சாளர் அலெக்ஸ் லோரன்ஸ் குறிப்பிட்டார்.

மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு சாதகமான விளைவுகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share This Post

Post Comment