முக்கிய கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 29 கனேடிய பெண்களின் பெயர்கள்

ekuruvi-aiya8-X3

29canadiyapenகனேடிய மத்திய அரசாங்கம் நாட்டில் உள்ள முக்கிய கட்டடங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 29 கனேடிய பெண்களின் பெயர்களை வைப்பதற்கு பட்டியல் இட்டுள்ளது. குறித்த நபர்களின் பெயர்களை கௌரவப்படுத்தும் முகமாகவே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்களின் பட்டியலில் பெண்கள் உரிமை ஆர்வலர் நீல் மக்கிளங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பேர்தா வில்சன் மற்றும் அணு இயற்பியல் விஞ்ஞானியான ஹரியட் புறூக்ஸ் ஆகியோரது பொயர்கள இடம்பெறுகின்றன.

இது குறித்து கனடா பொது பணித்துறை கருத்து தெரிவிக்கையில், குறித்த பட்டியலில் இறுதி நபர்கள் யார் என்று இதுவரை தெரிவாகவில்லை. தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இப்பட்டியல் எதிர்கால பயன்பாட்டிற்கு கிடைக்க கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

புதிய லிபரல் அரசாங்கம் அதன் முதல் அரச கட்டடத்தின் பெயரை விரைவில் திரை நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, முன்னாள் ஆளுனர் ஜெனரல் றோமியோ லபிளாங்கை கௌரப்படுத்தும் முகமாக கிரேட்டர் மொன்ங்ரன் சர்வதேச விமான நிலைய கட்டடத்திற்கு அவரது பெயரை வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment