மொன்றியல் போக்குவரத்து திட்டத்திற்கு பெருமளவு நிதியொதுக்கீடு

sdsd

monterial_18மொன்றியல் நகரின் பிரதான தொடரூந்து போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்திற்காக, மத்திய அரசு 1.28 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

மொன்றியல் நகரையும், அதன் சுற்று வட்டாரங்களையும், மொன்றியல் அனைத்துலக விமான நிலையத்தினையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த தொடரூந்துச் சேவைத் திட்டத்தினை கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அரசாங்கம் அறிவித்தது.

மாநில அரசாங்கம், இதற்காக ஒரு பில்லியன் டொலர் பங்களிப்பினை கோரியிருந்த நிலையில் தற்போது குறித்த நிதியினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

67 கிலோமீற்றர் நீளமான இந்த திட்டம் நிறைவேறியதும், தொடரூந்து சேவையானது வாரத்தின் ஏழு நாட்களும், ஒவ்வொரு நாளும் 20 மணி நேரங்களுக்கு, அனைத்துலக விமான நிலையம் உட்பட 27 தொடரூந்து நிலையங்கள் ஊடாக பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

Share This Post

Post Comment