கனேடிய அமைச்சரின் பூர்வீக உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகம்

ekuruvi-aiya8-X3

Maryam Monsef1ஆப்கானைச் சேர்ந்த மர்யம் மொன்செவ் என்ற பெண் கனேடிய அமைச்சரவையில் லிபரல் கட்சி அமைச்சராக பதவிவகிக்கின்றார் என்பது பரவலாக பேசப்பட்ட ஒருவிடயம். இது பலதரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் அவர் ஈரானில் பிறந்தவர் என்பதை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள மர்யம் மொன்செவ், தான் ஈரானில் பிறந்தவர் என்பதை அண்மையில் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கனேடிய அமைச்சரவையில் ஜனநாயக அமைப்புக்கள் அமைச்சராக பதவிவகிக்கும் மர்யம் மொன்செவ் இது குறித்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், தானும் அவருடைய இரு சகோதரிகளும் ஈரானிய குடியுரிமையை பெற்றிருக்கவில்லை என்றும் தாம் ஆப்கானிஸ்தவர்களாகவே கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆப்கானிஸ்தானின் ஹார்ட் நகரில் தாம் பிறக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் ஈரானின் மிஷ்காட் என்ற இடத்திலேயே தான் பிறந்ததாக மர்யம் மொன்செவ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இதுவரை காலமும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் ஆப்கானில் பிறந்ததாக நம்ப வைத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, மொன்செவவின் பெற்றோர் ஆப்கானைச் சேர்ந்தவர்கள். அவர்களின் திருமணம் ஆப்கானின் ஹார்ட் நகரில் நடைபெற்றது. எனினும் அக்காலத்தில் ஆப்கானில் பாதுகாப்பு நிலவரம் மோசமடைந்ததை தொடர்ந்து அவருடைய பெற்றோர் ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு 1984 ஆம் ஆண்டு மொன்செவ் பிறந்தவர். ஈரானில் தந்தையின் மரணத்தின் பின்னர் சொல்லணா துன்பங்களை அனுபவித்த மொன்செவ்வின் தயார் ஆப்கானின் நிலைவரம் சுமூகமாக் மீண்டும் ஆப்கானில் குடியேறினார்.

எனினும் ஆரம்ப காலங்கள் குறித்து பிள்ளைகளுடன் கலந்துரையாடுவதில்லை. அது முக்கியமானது என்றும் அவர் நினைக்கவில்லை.

இது குறித்து தயாரிடம் கேட்டபோது, ‘ அது முக்கியமானது என்று நான் நினைக்கவில்லை. ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவர்கள். ஆப்கான் குடியுரிமை பெற்றுள்ளீர்கள். ஈரானின் பிறந்திருந்தாலும் ஈரானியர்களாக கருதப்படவில்லை.’ என்று தெரிவித்ததாக மொன்செவ் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவுக்கு அகதியாக வந்து 42 ஆண்டுகள் கடந்துவிட்டதாக தெரிவிக்கும் மொன்செவ் தற்போது கனேடிய அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதும் கனேடியன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment