சட்டவிரோத கஞ்சா விற்பனை – ஒட்டாவாவில் பொலிஸார் சுற்றிவளைப்பு

கஞ்சா போதைப்பொருள் கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதை அடுத்து, பலவேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒட்டாவா பொலிஸார் போதைப்பொருள் பிரிவு சட்டவிரோத கஞ்சா விற்பனை தேடுதல் உத்தரவுக்கு அமைய இரண்டு கடைகளில் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

இதன் போது சட்டவிரோத கஞ்சா பொருட்கள் மற்றும் அதனால் கிடைக்கப்பெற்ற வருமானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இதன் போது மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இவர்களை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Related News

  • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
  • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
  • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
  • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *