கனடா அதிக அகதிகளை உள்வாங்க வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

ekuruvi-aiya8-X3

canda-21121ஆண்டில் இதுவரை கனடா குறைந்த அளவான அகதிகளையே உள்ளீர்த்துள்ள நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் உலக அகதிகள் தினத்தன்று ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் கனடாவுக்கான பிரதிநிதி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அகதிகளை மீள்குடியேற்றுவதில் கனடா தனக்கான பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கியுள்ளது. குறிப்பாக அண்மையில் சிரியாவில் இருந்து பெருமளவான அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. அத்துடன் கனேடிய மக்களும் அதற்கு பரந்த அளவில் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இருந்த போதிலும் உலக அளவில் 65 மில்லியனுக்கும் அகதிகமானோர் இன்று அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் வசதி படைத்த நாடுகள் இந்த விடயத்தில் அதிகம் உதவிகளை வழங்வேண்டிய கடப்பாடு உள்ளது. அத்துடன் தற்போதய நிலவரப்படி உலகளாவிய அளவில் 1.2 மில்லியன் மக்கள் உடனடியாக மீள் குடியேற்றப்பட வேண்டிய தேவையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை கனடா குறைந்த அளவான அகதிகளையே உள்ளீர்த்துள்ள நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா 1978ஆம் ஆண்டின் பின்னர், சாதனை அளவாக கடந்த ஆண்டில் 46,700 அகதிகளை குடியேற்றியுள்ளதுடன், 2016ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதி வரையிலான நிலவரப்படி ஐ.நா வால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 97,000 ற்கும் அதிகமானோர் கனடாவில் வாழ்ந்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment