சீனாவின் செல்லிடப் பணப்பரிமாற்ற சேவை (mobile payment) டொரொன்டொ நகரில் அறிமுகமாகின்றது

Facebook Cover V02

we_chat_payசீனாவில் இருந்து வரும் பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் டொரொன்டொ நகரின் உல்லாசப் பயணத்துறையும், சீனாவின் செல்லிடப் பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனமான OTT உம் இணைந்து “WeChat Pay” என்ற பணப்பரிமாற்றச் சேவையை டொரொன்டொ மாநகரில் அறிமுகப்படுத்தி உள்ளன.

சீனாவின் மிகப்பெரிய செல்லிடப் பணப்பரிமாற்ற சேவையான “WeChat Pay” 840 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக பயணச்சீட்டுக் கொள்வனவு மற்றும் பொருட்கொள்வனவு போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

இந்த உடன்படிக்கையின் மூலம் ஒன்ராரியோ மாகாணத்திற்கு வருகைதரும் சீன உல்லாசப் பிரயாணிகள் சீன நாணயமான “Yuan Renminbi” மூலம் தமது பணப்பரிமாணத்தை மேற்கொள்ள முடியும் என  ஒன்ராரியோ மாகாண சர்வதேச வர்த்தக அமைச்சர் மைக்கேல் சான் அவர்கள் தெரிவித்தார்.

Share This Post

Post Comment