அடுத்த நான்கு வருடங்களுக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

அடுத்த நான்கு வருடங்களுக்கு எப்படி வரி உயர்வை அதிகரிப்பது என்பது தொடர்பில் எட்மன்டன் நகர மேஜர் நேற்று (வியாழக்கிழமை) காலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.

மேலும் இதன் போது அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சொத்து வரிகளை அதிகரிப்பது பற்றி நகரம் ஊழியர்கள் 700 பக்கங்கள் கொண்ட முன்மொழிவொன்றினை முன்வைத்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட அதிகரிப்பின் படி சராசரி வீட்டு உரிமையாளருக்கு, அடுத்த வருடத்தில் கூடுதல் 79 டொலர் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 இல் 72 டொலர் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 50 டொலர்கள் அதிகரிக்கப்படும் எனவும் அந்த முன்மொழிவினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 4 மாதத்திற்கான வரவு செலவுத் திட்ட பேச்சு மாதத்தின் இறுதியில் அரமபமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Related News

  • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
  • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
  • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
  • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *