குற்றச்சாட்டின்றி பல வருடங்கள் காவலில் இருந்தவர் நாடு கடத்தல்

ekuruvi-aiya8-X3

cannews_0809ஜமெய்க்காவை சேர்ந்த ஒருவர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி ஐந்து வருடங்களாக குடிவரவு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் சில சந்தேகங்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 40 வயதுடைய அல்வின் பிறவுன் என்ற குறித்த நபர் 33 வருடங்களுக்கு முன்னர் கனடா வந்து, அங்கு நிரந்தர வதிவுடமை பெற்றார். அதன் பின்னர் போதை மருந்து, ஆயுதங்கள் சம்பந்தபட்ட 17 குற்றச் செயல்களுக்காக அவர் சிறை தண்டனை பெற்றார்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் 2011ஆம் ஆண்டு எல்லைப்புற அதிகாரிகள் அவரை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக தடுத்து வைத்து பின்னர் மீண்டும் நிபந்தனையின் கீழ் விடுதலை செய்தனர். தொடர்ந்து ஐந்து வருடங்களாக குடிவரவு தடுப்புக்காவலில் இருந்த பிறவுன் தனது தடுப்பு காவலை நியாயப்படுத்துமாறு கேட்டார்.

இந்நிலையில், செப்டம்பர் 7ஆம் திகதி, அவர் கனடாவை விட்டு வெளியேறுவார் என ரொறொன்ரோ உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தற்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஜமெய்க்கா இவருக்கு பயண ஆவணங்கள் வழங்க தவறியதால் இவரது நாடு கடத்தல் குறித்து சந்தேகம் கொள்ளப்படுகின்றது என பிறவுனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment