அனைத்துலக அமைதிக்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு இம்முறை கனடாவில்

ekuruvi-aiya8-X3

amathi_0806ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துலக அமைதிக்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு இந்த முறை கனடாவில் நடத்தப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வன்கூவரில் அனைத்துலக அமைதிக்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் 70 நாடுகளில் இருந்து சுமார் 500 பேராளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளை மீளக் கட்டியமைத்தல், பயிற்சி மற்றும் படையினரின் ஆற்றல் ஆகியவற்றினை மேம்படுத்தும் வகையிலான புதிய அணுகுமுறை பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள், இந்த மாநாட்டில் ஆராயப்பட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் குறிப்பிட்டார்.

இந்த அமைதி காப்பு நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளை ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை கனடா தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மன்றுக்கு தேவைப்பாடுகள் காணப்படும் பகுதிகள், அதிலும் குறிப்பாக படையினரின் தேவைப்பாடு ஆகிய பகுதிகளில் உறுப்பு நாடுகளின் பங்களிப்பினை கனடா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா தனது 600 படைவீரர்களையும், 150 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஐ.நா அமைதிகாப்பு படைகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக மத்திய லிபரல் அரசாங்கம் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தெரிவித்துள்ள போதிலும், அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஐ.நா அமைதிகாப்பு படைகளில் கனடா தம்மையும் இணைத்துக் கொள்வதற்கான வாய்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மாநாட்டினை கனடா ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

Share This Post

Post Comment