எட்மண்டனில் இளம் பெண் உயிரிழப்பு: சந்தேகத்தின் பேரில் தாய் கைது

Thermo-Care-Heating

2_CANஎட்மண்டன் பகுதியில் இளம் பெண் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்மண்டனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு குறித்த பெண் காயங்களுடன் காணப்பட்டதாகவும், எனினும் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 21 வயதான றேச்சல் லோங்றிச்; என்றும், அவர் தாதியர் கல்லூரி பட்டதாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளம்பெண் அண்மையிலேயே மருத்துவ தாதியர் பட்டப்படிப்பில் முதல் நிலை சித்தியடைந்து பட்டம் பெற்றுள்ளார் என்றும், விரைவில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் புதிய பதவி ஒன்றில் இணையவிருந்தார் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக எட்மண்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் அவரின் தாயாரான 50 வயதுடைய கிறிஸ்டீன் லோங்றிச் என்பவர் மீது, இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலம் தெரிவித்தனர்.

ideal-image

Share This Post

Post Comment