அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா விநியோகத்தர் கனடாவில் கைது

Facebook Cover V02

can_3_2612மொன்றியலுக்கு வெளியே உள்ள சிறிய நகர் ஒன்றில் வைத்து பிரபல கஞ்சா விற்பனை விநியோகத்தரை கடந்த வியாழக்கிழமை கனேடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர் அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனவும், விரைவில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

‘Godfather of Grass’ என்று விபரிக்கப்படும் அமெரிக்காவின் பிரபல போதைப் பொருள் குற்றவாளியான குறித்த நபரை, அமெரிக்க அதிகாரிகள் சுமார் 8 ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்ததாக கூறப்படுகிறது.

ஜோன் ரெபேர்ட் எனப்படும் அந்த நபர் தனது பண்ணை ஒன்றில் 2,400 கஞ்சா மரச் செடிகளை வளர்த்து வந்திருந்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து. அவர் அங்கிருந்து தலைமறைவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சுமார் 73 வயதாகும் ரெபேர்ட், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் கஞ்சா விநியோகத்தினை மேற்கொண்டுவந்த நபர் என்று கூறப்படுகிறது.

இவருக்கு சொந்தமாக மினிசோட்டா, இன்டியானா, கென்தக்கி, மிச்சிக்கன் உள்ளிட்ட மேலும் பல இடங்களிலும் சுமார் 29 பண்ணைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 1980ஆம் ஆண்டுகளில் அவர் ஏற்கனவே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரும் அவர் இந்த கஞ்சா விநியோக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டமை குறித்தே அமெரிக்க அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

Share This Post

Post Comment