ஆபத்தான நாய்களை வளர்ப்பவர்களுக்கு கடும் சட்டம்

Thermo-Care-Heating

dog_1609ரொறன்ரோவில் ஆபத்தான நாய்களை வளர்ப்பவர்கள், தாம் நாய் வளர்க்கும் பகுதிக்குள் எச்சரிக்கை குறியீடு ஒன்றை வைக்க வேண்டும் என்றும் தமது நாய் ஆபத்தானது என்பதை குறிக்கும் வகையில் அதன்மேல் குறி ஒன்றை அணிவிக்க வேண்டும் என்றும் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் மற்றும் தரநிலை குழு இது குறித்து அடுத்த வாரம் விவாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆபத்தான நாய் சொந்தக்காரர்கள் தெளிவாகத் தெரியக்கூடிய பகுதியில் எச்சரிக்கை அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக அவர்களது நாய்க்கென்று ஆபத்தான நாய் குறியீடுகள் நகர சபையினால் விநியோகிக்கப்படும்.

அதே போல் ஆபத்தான நாய்களின் சொந்தகாரர்களின் சொந்த இடத்தை விட்டு வெளியே செல்லும் எந்நேரமும் நாயின் வாய்க்கு மூடிபோடுதல் மற்றும் நாய் வார் பூட்டுதல் போன்றனவும் புதிய சட்டத்தில் கட்டாயமாக்கப்படுகின்றது.

அதேபோன்று, நாய்களை இலகுவாக அடையாளம் காணவும் கண்காணிக்கவும் மைக்ரோ சிப் பொருத்துவதும் கட்டாயமாக்கப்படும். மேலும், நாய்களின் சொந்தக்காரர்கள் நாய்கள் தகைமை பயிற்சி பெற்றமைக்கான சான்றை நகர சபைக்கு வழங்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment