பியர்சன் விமான நிலையத்தில் 43 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

ekuruvi-aiya8-X3

cocyinரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 43 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் வகை போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 5ஆம் திகதி, வெனிசுலாவின் அருகில் அமைந்துள்ள இரட்டைத் தீவுக் கருபியன் நாடான ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோவில் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் எடுத்துவரப்பட்ட பொதிகளை சோதனை செய்த கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகள் இதனை மீட்டுள்ளனர்.

மாப் பொருட்கள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டிருந்த பொதியினுள், அந்த மாப் பொருட்களுக்கு மத்தியில் 38 கட்டிகளாக இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 43 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் வகை போதைப் பொருட்கள் பின்னர் கனேடிய மத்திய காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Post

Post Comment