ஸ்கார்பாரோ பகுதியில் விபத்து – 40 வயதுடைய பெண் காயம்

ekuruvi-aiya8-X3

accident-1109ஸ்கார்பாரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மார்க்கம் வீதி மற்றும் மெக்னிக்கல் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சைக்கிளில் பயணித்த 40 வயதுடைய பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment