ஸ்காபுரோவில் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆய்வு

ekuruvi-aiya8-X3

scap_07ஸ்காபுரோவின் வடகிழக்கு பகுதியில் ஸ்டீல்ஸ் அவனியூற்கு தெற்கே, சீவெல்ஸ் வீதியில் அமைந்துள்ள வாகனத் திருத்துமிடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பாரிய தீ விபத்து தொடர்பில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அதிகாரிகள் ஆய்வுகளில் ஈடுப்பட்டதாக ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சாண் தெரிவித்துள்ளார்.

இந்த தீ பரவல் குறித்து சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள், அங்கு சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தீவிபத்து குறித்து ரொரன்ரோ தீயணைப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எண்ணெய் சேமிக்கப்பட்ட இடத்தில் இந்த தீ பரவல் ஏற்பட்டது.

அங்கு வீசிய வேகமான காற்றின் காரணமாக தீப்பரவலை கட்டுப்படுத்துவதில் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கினோம். இருப்பினும் பிற்பகல் 5 மணியளவில் குறித்த தீயிணை ஓரளவு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment