வர்த்தக உடன்படிக்கைகள் ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயமல்ல – கனேடிய பிரதமர்

Thermo-Care-Heating

can_pm30சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை நெறிமுறைப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாகலாம் எனவும், அது ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயம் இல்லை என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜஸ்ரின் ட்ரூடோ, சீன பிரதமரை சந்தித்த பின்னர் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த கனேடிய பிரதமர்,வர்த்தக உடன்பாடுகளை எட்டுவது என்பது ஓரிரவில் சாதிக்கும் விடயமல்ல. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் அதேவேளை, எதிர்காலத்திலும் தொடரும்.

பல சவால்களுக்கு மத்தியில் உடன்பாடு எட்டப்படுவதானது வரலாற்றின் மைல் கல்லாகும். எமது குடிமக்களும், வணிகமும் நன்மையடையும் வகையிலான அதிக வாய்ப்புகளை நாம் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில், இந்த பேச்சுவார்த்தையானது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளரான சீனாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு எமக்கு கிடைத்த முக்கிய தருணமாகும் என்றார்.

ideal-image

Share This Post

Post Comment