முதல் தடவையாக வாங்கிய அதிர்ஷ்ட சீட்டில் 1 மில்லியன் டொலர்கள் பரிசு

ekuruvi-aiya8-X3

lucky29தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல் தடவையாக அதிஷ்டலாப சீட்டு வாங்கிய இளம்பெண் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தை சேர்ந்த 18வயதான சார்லி லகர்டி என்ற பெண்ணுக்கே இந்த அதிர்ஷ்டம் வாய்த்துள்ளது.

வாரம் ஒருமுறை பணத்தை பெற்று கொண்டால் வரி கிடையாது என்பதை அறிந்த சார்லி அதன்படி பணத்தை பெற்று கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கமைய அவர் வாரம் 1,000 டொலர்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிர்ஷ்டலாப சீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பணத்தை தன் கல்வி மற்றும் பயணத்துக்காக செலவு செய்ய விரும்புவதாக சார்லி கூறியுள்ளார்.

Share This Post

Post Comment