2018 ஆம் ஆண்டுக்கான ஜி7 மாநாடு கனடாவில் . . .

ekuruvi-aiya8-X3

G7_canadaஜி7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு அடுத்த ஆண்டு கனடாவின் கியூபெக் மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) இத்தாலியின் சிசிலியில் நடைபெறவுள்ள ஜி7 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கியூபெக்கின் ச்சார்லவோய் பிராந்தியத்தில் 2018ஆம் ஆண்டுக்கான ஜி7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதான உத்தியோகபூர்வமற்ற, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருப்பதாக அந்த பிராந்தியத்திற்கான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரொலைன் சிமார்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமது பிராந்தியத்தில் இத்தகைய மாநாடு ஒன்று நடைபெறுவதன் மூலம், பொருளாதார நலன்கள், அனைத்துலக அளவிலான ஊடக பார்வை, சுற்றுலாத் துறையில் அங்கு ஒரு புத்துணர்ச்சி என பல நன்மைகள் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கரொலைன் சிமார்ட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்காக பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகைதரும் நிலையில், அந்த பகுதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவற்றிற்கான நடவடிக்கைகள் உச்ச அளவானதாக பேணப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Post

Post Comment