கனடிய விமானம் வாஷிங்டனில் அவசரமாக தரையிறக்கம்

ekuruvi-aiya8-X3

can_air_washingtonரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட கனடிய விமானமொன்று, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானிகள் அமர்ந்திருந்த இருக்கை பகுதியில் புகை கிளம்பியதால், அந்த விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் சுமார் 63 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் எவ்வித காயங்களும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட ஏ.சி 7618 விமானமே டலஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த புகை எங்கிருந்து வெளியேறியது என்ற தகவல் எதனையும் வெளியிடாத அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This Post

Post Comment