தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் திட்டத்தில் முறைகேடுகளா?

veli_2509லிபரல் அரசு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை விரிவாக்க உத்தேசித்துவரும் நிலையில், குறித்த திட்டத்தில், முறைகேடுகள் காணப்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்த முன்னதாக, அந்த வெற்றிடங்களுக்கு அல்லது அப்பணிகளைச் செய்வதற்கு கனடாவில் பணியாளர்கள் இல்லை என்பதை, வேலைகொள்வோர் உறுதிப்படுத்தவேண்டும் என்பது விதி. ஆனாலும் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில், இந்நடைமுறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என, இத்திட்டம் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது பேச்சுவார்த்தைக் கட்டத்தில் இருக்கும் கனடாவின் சுதந்தர வர்த்தக ஒப்பந்தங்கள் அமுலுக்கு வருமாயின், இவ்விதி அமுல்படுத்தப்படுவதில் மேலும் தளர்வு ஏற்பட்டு, வெற்றிடமான இடங்களிற்கு கனேடியர் ஒருவரைத் தேடாமல், நேரடியாகவே வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.

இத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-2014 காலப்பகுதியில் சிறிதளவு வீழ்ச்சியைக்க ண்டிருந்தது. ஆயினும் 2014 இன் பின்னர் இத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 194,000யையும் விட அதிகமானது என இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.


Related News

 • விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
 • சட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு!
 • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
 • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *