புற்றுநோயிலிருந்து மீண்டு, இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நடிகை

நடிகை லிசா ரே புற்றுநோயிலிருந்து மீண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நடிகை லிசா ரே. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானவர்.

lisa-reyகடந்த 2009ஆம் ஆண்டு மைலமோ எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லிசா ரே, 2010ஆம் ஆண்டு தாம் ஸ்டெம்செல் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தார்.

எனினும், இது அபூர்வமான புற்றுநோய் என்பதால் அவர் முழுமையாக குணமடையவில்லை.

இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேசன் டேனி என்பவரை லிசா ரே திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் வாடகைத் தாய் மூலமாக தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக லிசா ரே கூறுகையில், ‘2009ஆம் ஆண்டில் எனக்கு இரத்த புற்றுநோய் இருப்பது தெரிந்ததும், வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன், குழந்தை பேறில்லாமல் வாழ வேண்டியிருக்கும் என நினைத்தேன்.

ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் புற்றுநோய் குணமானதுடன், வாடகை தாய் மூலம் குழந்தைகளுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான என் பயணம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நம்பிக்கை அளிக்கும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

இதேவேளை, லிசா ரே-ஜேசன் டேனி தம்பதியர் தங்களது குழந்தைகளுக்கு சூஃபி, சோலேய்ல் என பெயரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • பெண்ணை கொடூரமாக கொலை செய்த ஒருவர் கைது
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • கல்கரியில் கொள்ளை – பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு – சாரதிகளே அவதானம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *