அதிகாலையில் தடம் புரண்ட புகையிரதம்

Thermo-Care-Heating

கனேடியன் பசுபிக் புகையிரத சேவைக்கு சொந்தமான புகையிரதம் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தடம்புரண்டுள்ளது.Train_2108

டூப்பன்ட் வீதி ஹாவ்லான்ட் அவனியூ பகுதியில் காலை 5.45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் இதன்போது எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபாயகரமான பொருட்கள் எவையும் குறித்த புகையிரதத்தில் ஏற்றிச் செல்லப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் இரண்டு புகையிரதங்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் சரியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

அத்துடன் புகையிரதம் தடம்புரண்டமைக்கான காரணமும் இதுவரை தெரியவரவில்லை.

ideal-image

Share This Post

Post Comment