சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற கனேடியர்

Teacher_awardசிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதை கடாவைச் சேர்ந்த ஆசிரியரான மாகீ மக்டோனெல் பெற்றுக்கொண்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருதுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் கனடா, பாக்கிஸ்தான், பிரித்தானியா, ஸ்பெய்ன், யேர்மனி, சீனா, கென்யா, அவுஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தேர்ததெடுக்கப்பட்ட குறித்த பத்துப்போகளில் வெற்றியாளராக கனடாவின் மாகீ மக்டோனெல் அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இவரது பெயரை அனைத்துலக விண்வெளி மையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டின் விண்வெளி வீரரான தோமஸ் பாஸ்குவட் என்பவர், நேரடி காணொளி வாயிலாக அறிவித்தமை நிகழ்வின் சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது.

இதேவேளை சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதை வென்ற ஆசிரியை மாகீ மக்டோனெலுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை மாகீ மக்டோனெல் எதிர்காலத்தினை வடிவமைக்கும் சிற்பி என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.

மாகீ மக்டோனெல் கியூபெக்கில் தனித்து விடப்பட்ட ஒதுக்குப்புறமான கிராமப் பாடசாலை ஒன்றில் தத்துவ ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.

அவர் கற்பித்துவரும் அந்த பாடசாலையானது, கியூபெக்கில் மிகத் தொலைவில், ஆர்ட்டிக் பிராந்தியத்துடன் ஒட்டியுள்ள ஒரு தனித்த, மிகவும் குளிர் மிகுந்த கிராமத்தில் அமைந்துள்ளது.

அங்கு செல்வதற்கு தரைப் பாதைகள் இல்லாத நிலையில், ஆகாய மார்க்கமாகவே அங்கு செல்லமுடியும் என்பதுடன், அங்கு உறைநிலைக்கு கீழே 20 பாகை செல்சியஸ் குளிரின் மத்தியிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறான ஒரு இடத்திலேயே கனேடிய ஆசிரியையான மாகீ மக்டோனெல் கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கே தங்கிருந்து அங்குள்ள மாணவர்களுக்கு தனது ஆசிரிய சேவையை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *