வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விளையாட்டு அல்ல – பிரதமர்

ekuruvi-aiya8-X3

Can_pm_3009வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விளையாட்டு அல்ல. அது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கான வெற்றியாக இருக்க முடியும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, அகமதாபாத்திலுள்ள இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போது மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடந்த 1994 ஆம் ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட வரலாற்று ரீதியான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் பயனடையாதவர்களும் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உடன்படிக்கையை நவீனமயப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் சிக்கலடைந்துள்ளன என்றும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Post

Post Comment