டிரம்பின் புதிய கொள்கை மாற்றத்தால் கனடாவுக்கு பாதிப்பு இல்லை

sdsd

trum_justinகியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு கியூபாவுக்கும் இடையில் சுமார் அரை நூற்றாண்டாக நிலவிய கடுமையான நிலைமைக்கு கடந்த ஒபாமா நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் இரு நாடுக்கிடையிலான உறவு எதிர்வரும் காலங்களில் வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூப அரசாங்கம் மீது ஒபாமா நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட சில பயண மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முற்றிலும் ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவு ஏற்படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஆனால் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் ஜஸ்ரின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கம்யூனிச தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையடைந்துள்ள போதிலும், கனடாவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான உறவுநிலையும் செயற்பாடுகளும் வழக்கம் போலவே இருக்கும். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, இப்போது மட்டுமின்றி மிக நீண்ட காலமாகவே கனடா கியூபாவுடன் இணக்கமான போக்கினை கடைப்பிடித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் இந்த புதிய நிலைப்பாடு, கனடாவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துவித நடவடிக்கைகளிலும் எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்தாது. கனேடிய நிறுவனங்களால் கியூபாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள், அந்த நாட்டுடனான சுற்றுலாத்துறை உள்ளிட்ட வர்த்தக மற்றும் இருதரப்பு நலன்கள், உறவுகள் என்பன நிச்சயமாக தொடரும்” என குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment