கனடிய பிரதமர் இந்தியா விஜயம்

Facebook Cover V02

Can_pm_3009கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று (சனிக்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு உள்ளிட்ட மூலோபாய உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஏழுநாள் அரசமுறை சுற்றுப்பயணமாக கனேடிய பிரதமர் இன்று புதுடெல்லி செல்வார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு செல்லும் கனடிய பிரதமர், 19 ஆம் திகதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலுள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். அங்கு இந்திய மேலாண்மை கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து காந்தி நகரிலுள்ள அக்ஷர்தாம் ஆலயத்தையும் பிரதமர் பார்வையிடவுள்ளார்.

பின்னர், 20 ஆம் திகதி மும்பை செல்லும் பிரதமர், தொழிலதிபர்களையும் இந்திய திரையுலக பிரபலங்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் 21 ஆம் திகதி பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகரிலுள்ள சீக்கிய பொற்கோவிலை பார்வையிடவுள்ளார்.

22 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலும் இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

24 ஆம் திகதி மாற்றத்துக்கான இளைஞர்கள் கருத்தரங்கில் பேருரையாற்றும் ஜஸ்ரின் ரூடோ அன்று இரவு மீண்டும் நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment