தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு

Thermo-Care-Heating

canada_policecarDewdney அவென்யூ பகுதியில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை ரெஜினா பொலிஸார் மும்முரமாக தேடிவருகின்றனர்.

சனிக்கிழமை மாலை 4.41 மணியளவில், Dewdney அவென்யூ 4200 தொகுதியில், உள்ள வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்னை அறியப்படாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்னும், அனுகி அப்பெண்னை தாக்கி அவரிடமிருந்த எம்பி 3 பிளேயரை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அவ் இருவரையும் பிடித்து, தனது எம்பி 3 பிளேயரை மீட்டுள்ளார். ஆனால் குறித்த இரு சந்தேக நபரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் படுகாயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச் சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேகநபர்களின் அங்க அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பெண் சந்தேகநபர் நீல உடையும், பழுப்பு தோள்பட்டை கொண்டவராகவும், கருப்பு நிற பணப்பையும், நீண்ட முடி கொண்டவராகவும் தென்பட்டுள்ளார். மேலும், ஆண் சந்தேகநபர் வெள்ளை நிற ரீ-சட்டும், பந்து வடிவிலான தொப்பியும் அணிந்திருந்ததாக விபரிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் குறித்து எவருக்கும் தகவல் தெரியுமாயின் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாரு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment