லட்வியாவில் இராணுவ நடவடிக்கையை நீடிக்க பிரதமர் முடிவு

ekuruvi-aiya8-X3

can_pm_0707லட்வியாவில் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் 4 ஆண்டுகளுக்கு கனடா நீடிக்கவுள்ள நிலையில், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கனடிய படைகள் அங்கு நிலைகொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அங்கு நிலைகொண்டுள்ள 455 கனடிய படை வீரர்களின் எண்ணிக்கையை 540 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்வியாக்கான பயணத்தின் போது, அந்த நாட்டு பிரதமருடன் சந்திப்பில் ஈடுபட்டதன் பின்னர் குறித்த அறிவிப்பின் கனயடிப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரசெல்ஸ் செல்வதற்கு முன்னதாக அவர் லட்வியா சென்று அங்கு பணியாற்றிவரும் கனடிய இராணுவத்தினருடனும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment