பிரம்ப்டன் பகுதியில் கத்திக்குத்து – 33 வயது பெண் படுகாயம்

Facebook Cover V02

pramp12பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 33 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்துள்ளதாகவும், இதன் போது காயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்கானவருக்கு எவ்வித உயிராபத்தும் இல்லை என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இக் கத்திக்குத்து சம்பவதிற்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக விசரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரம்ப்டன் பூங்கா அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலிலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share This Post

Post Comment