திடீரென கேட்டல் திறனை இழந்த கனேடிய இராஜதந்திரி: விசாரணை ஆரம்பம்

ekuruvi-aiya8-X3

can31208ஹவானாவில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு திடீரென கேட்டல் குறைபாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தூதரக அதிகாரி, கேட்கும் திறனை இழந்துள்ளதுடன் கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியூப தலைநகரில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் சிலர் இதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா அறிவித்து ஒருசில நாட்களில் கனடாவும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கியூபாவில் உள்ள அமெரிக்க மற்றும் கனேடிய இராஜதந்திரிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் வழமைக்கு மாறான விதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம்.

எனினும் தற்போதைக்கு இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என நாங்கள் கருதவில்லை’ என்றும் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க மேற்படி குற்றச்சாட்டுக்களை கியூபா நிராகரித்துள்ளது. தனது மண்ணில் இராஜதந்திரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு ஒரு போதும் அனுமதியில்லை என்று கியூபா தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment