பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு

can_fire11கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் நேற்று(வெள்ளிக்கிழமை) புதிய காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீ பரவல் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 300 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.






Related News

  • கனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்
  • விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
  • சட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு!
  • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
  • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
  • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
  • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
  • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *