கனடாவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

can_police10கிழக்கு கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களில் இரண்டு பொலிஸாருக்கும் அடங்குவதாக நியுவ் ப்ரவுன்ஸ்விக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதுவரையில் துப்பாக்கி பிரயோகம் தொடர்பான முழுமையான தகவல்கள் எவையும் வெளியாகாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களை வெளியில் நடமாட வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூ

Facebook Cover V02

டோ ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தனிநபர் துப்பாக்கிகளை வைத்திருக்கும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *