சில்வன் ஏரி பகுதியில் வாகன விபத்து – குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

sylvan-accident0808சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள், ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நெடுஞ்சாலை 781 பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் SUV வாகனத்தில் பயணித்த 39 வயதுடைய ஆண் மற்றும் 5 வயதுடைய குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரக் ரக வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயதான ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் SUV வாகனத்தில் பயணித்த ஏழு வயதான சிறுவன், காயமடைந்த நிலையில் எட்மன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Related News

 • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
 • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • பெண்ணை கொடூரமாக கொலை செய்த ஒருவர் கைது
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *