கனேடிய பயணிகள் விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானம்

ekuruvi-aiya8-X3

cuba_02கியூபா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் போர் விமானத்தின் உதவியுடன் மொன்றியல் ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவரின் உண்மைக்கு புறம்பான அச்சுறுத்தலை அடுத்து இந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மொன்றியலில் இருந்து 170 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற சண்விங் விமான நிறுவனத்திற்கு சொந்தமான டபிள்யு.ஜி. 604 என்ற குறித்த விமானம் அமெரிக்க போர்விமானமான எவ்-15 வழித்துணையுடன் இரவு உள்ளூர் நேரப்படி 7.25 மணியளவில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் அமெரிக்க நியூயோர்க் பகுதிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போதே அமெரிக்க விமானப்படை விமானம் வழிமறித்து வழித்துணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கனேடிய போர் விமானங்களும் துணைக்கு சென்ற போதிலும் தொலைவில் இருந்தவாறே நிலைமையினை அவதானித்ததாக கூறப்படுகின்றது.

அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் மீண்டும் பயணிக்கும் வரையில் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக சண்விங் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment