மொன்றியல் படுகொலையின் 28வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Thermo-Care-Heating

mon1மொன்றியலில் 14 பெண்களை படுகொலை செய்தததன் 28வது ஆண்டு நினைவு தினம் நேற்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

14 பெண்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நடைபெற்ற பாடசாலையில் அமைந்துள்ள நினைவுசின்ன முத்திரையின் முன்னால் வெள்ளை ரோஜா மலர்வளையம் வைக்கப்பட்டு இறந்தவர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வில் துணை பிரதமர் டொமினிக் அன்கிளாட், ஆளுநர் வலரி பிளன்ரே மற்றும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் மனைவி ஷோபி கிரெகொரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கடந்த 1989 டிசம்பர் மாதம் 6ஆம் திகதி மொன்றியல்- இகோல் பொலி டெக்னிக் பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 பெண்கள் உயிரிழந்ததோடு, 14 பெண்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ideal-image

Share This Post

Post Comment