ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்து கலந்துரையாடல்

Facebook Cover V02

can_ire_pmகனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்து அயர்லாந்து பிரதமர் மற்றும் கனேடிய பிரதமருக்கு இடையில் கலந்துiராயடப்பட்டுள்ளது.

இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையானது கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பரஸ்பரம் சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறி நிலையிலிருந்து கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் முயற்சியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் குறித்த உடன்படிக்கையில் ஒருமித்த கருத்தினை கொண்டுள்ள நிலையில் உடன்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளாத ஏனைய நாடுகள்; இணக்கம் தெரிவிப்பதற்கு அயர்லாந்து உதவக்கூடும் என்ற கனடாவின் எதிர்பார்பாகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Share This Post

Post Comment