கனடாவுடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை மிக முக்கியமானது – சீனா

ekuruvi-aiya8-X3

can-cjhinaகனடாவுடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்வது தமக்கு மிகவும் முக்கியமானது என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடுகள் வட அமெரிக் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சீனா கனடா இடையே தடையற்ற வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பிலான இருதரப்பு பேச்சுக்கள் புதியதொரு முக்கியத்துவத்தை பெற்றுள்ளன என்று கனடாவுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.

மொன்றியலில் வர்த்தக தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ள அவர், இந்த ஒப்பந்தம் குறித்து இரண்டு நாடுகளின் வர்த்தக பிரதானிகளுக்கும் இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கடந்த வியாழக்கிழமை ஒட்டாவாவில் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த நடைமுறைகளை வேகப்படுத்தி, கூடிய விரைவில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கனடாவின் நிதி அமைச்சர் பில் மோர்னியோ, அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஆகியோர் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அங்குள் தமது துறை அமைச்சர்களுடன் அமைச்சரவை மட்ட பேச்சுக்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment