ரொறொன்ரோவின் பாதுகாப்பில் புதிய மாற்றம்

ekuruvi-aiya8-X3

caref2ரொறொன்ரோ நகராட்சி கட்டடத்தின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறொன்ரோ பொலிஸ் சேவை மற்றும் கனடா பொது பாதுகாப்பு பிரிவின் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரொறொன்ரோ மேயரின் நிறைவேற்று குழு நகர சபைக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முன் நடவடிக்கையாகவே இது கருதப்படுகின்றது. மேலும், கனடாவின் உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment