யாஸிடி அகதிகளை நாட்டிற்குள் உள்வாங்குவதற்கான தயார்படுத்தல்;ஜோன் மக்கலம்

Thermo-Care-Heating

john_2010யாஸிடி அகதிகளை எதிர்வரும் 4 மாதங்களுக்குள் நாட்டிற்குள் உள்வாங்குவதற்கான தயார்படுத்தல்களில் லிபரல் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐ.எஸ் தீவிரவாதிகளின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு இலக்காகி மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள யாஸிடி இனமக்களுக்கு ஆதரவு வழங்க லிபரல் அரசாங்கம் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், யாஸிடி அகதிகளை நாட்டிற்குள் உள்வாங்குவதற்கான செயன்முறையை ஆரம்பிக்க தனது துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அவர்கள் அப்பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்த மக்கலம், உள்வாங்கப்படவுள்ள அகதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிடவில்லை.

ஆயினும் சிரியா மற்றும் துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள யாஸிடி மக்கள் போர் வலயத்திற்குள் அகப்பட்டுள்ளமையினால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது சவாலாக இருப்பதே, இந்த செயன்முறையில் உள்ள ஒரே பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வட ஈராக்கில் குர்திஷ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்களே யாஸிடி மக்களாவர். இவர்களை இலக்க வைத்து பாலியல் பலாத்காரம், சித்திரவதை மற்றும் படுகொலை போன்ற ஈனச் செயல்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment