தற்காலிக உடன்படிக்கை: மேற்கு வன்கூவர் பேரூந்து சேவைகள் வழமைக்குத் திரும்பின

Facebook Cover V02

can_busஒரு நாள் பணிப் பகிஷ்கிப்பை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் தற்காலிக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக மேற்கு வன்கூவர் மாவட்ட பேரூந்து சாரதிகள் மற்றும் இயந்திர திருத்துநர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க் கிழமை) காலை பேரூந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளமையை தொழிற்சங்க பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆயினும் எட்டப்பட்டுள்ள தற்காலிக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான எந்த தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் பேரூந்து சாரதிகள் மற்றும் இயந்திர திருத்துநர்களுக்கு அதிகளவான வருமானம் கிடைக்கப்பெறும் அடிப்படையில், பல நல்ல திட்டங்களை உள்ளடக்கி குறித்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share This Post

Post Comment