305,000 குடிவரவாளர்களை நிரந்தரவதிவாளர்களாக அனுமதிக்க லிபரல் அரசு திட்டம்

Facebook Cover V02

canada_24082016கனடாவின் தொழிலாளர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு, 2016 ஆம் ஆண்டில் 280,000 தொடக்கம் 305,000 வரையான எண்ணிக்கையானோரை நிரந்தரவதிவாளர்களாக அனுமதிக்க லிபரல் அரசு திட்டமிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தில் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம், அண்மையில் ஆற்றிய உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கனடாவில் அதிகரித்துவரும் முதியோர்களின் எண்ணிக்கை, அதிகரிக்கும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகிய பற்றிச் இதன் போது, அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதாக மக்கலம் அவர்கள் சீனத் தலைநகர் பீஜிங் இற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்களைக் கனடாவிற்குள் வரவழைக்கும் முகமாக சீனாவில் மேலும் 5 விசா வழங்கும் அலுவலகங்களை அமைக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment