ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் தீப்பரவல்

Facebook Cover V02

fire241ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Danforth avenue மற்றும் Coxwell avenue பகுதியில், Hanson Streetஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.

இந்த தீப்பரவல் சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்ற தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share This Post

Post Comment