மூதாட்டி மர்மக் கொலை – சந்தேகத்தில் கனேடியரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

Facebook Cover V02

ca_peru23பெரு நாட்டில் உள்ள மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக கூறி கனேடியர் ஒருவரை பெரு நாட்டின் அமேசான் பகுதியில் உள்ள கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலீவியா எனப்படும் குறித்த மூதாட்டி மருத்துவத்துறையில் கைதேர்தவராக காணப்பட்டு வந்துள்ளார். அவரிடம் பௌல் வூட்சோஃபி எனப்படும் கனேடியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 19ஆம் திகதி குறித்த மூதாட்டியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மூதாட்டியின் மரணத்தால் அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரடைந்துள்ளனர்.

மூதாட்டியின் கொலையுடன் பௌல் வூட்சோஃபிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை சிறைபிடித்த கிராம மக்கள் கடுமையாக தாக்கி கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை விசாரணை செய்து வரும் பொலிஸார் பௌல் வூட்சோஃபியின் கொலை தொடர்பாகவோ அல்லது மூதாட்டியின் கொலை தொடர்பாகவோ இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.

மூதாட்டியின் கொலை பெருவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அமேசானுக்கு வரும் வெளிநாட்டவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இரு கொலைகள் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதோடு, மூதாட்டி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டிப்பாக கைது செய்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment