புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்

கனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து, நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நகரில் புகைப்பதற்கு என்று மேலும் 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு என ஹலிஃபெக்ஸ் நகரில், குறிப்பாக பேரூந்து தரிப்பிடங்கள் உட்பட ஒன்பது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *