வியட்நாமை சென்றடைந்தது HMCS வான்கூவர்

ekuruvi-aiya8-X3

HMSகனேடிய கடற்படைக் கப்பலான HMCS வான்கூவர் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு, வியட்நாம் நாட்டின் ஹோ-சி-மின் நகரை ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி சென்றடைந்தது.

கனேடிய கடற்படைக்கும், ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் கடற்படைக்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்துவதற்காகவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

போர்க்கப்பல், வியட்நாமைச் சென்றடைய முன்னர், ஒக்டோபர் 11 ஆம் திகதி அன்று சிங்கப்பூரிற்கும் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment