துப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி?

Facebook Cover V02

can21-07கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்களை, கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்களிடம் நகர சபை கோரியுள்ளது.

ஐந்து ஆண்டுகள் கொண்டதாக அமையவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக, அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளை குறைக்க முடியுமென நகர சபை நம்புகின்றது.

44 மில்லியன் டொலர்கள் கொண்ட இந்த திட்டத்தில், 30.3 மில்லியன் டொலர்கள், சமூகநலத் திட்டங்கள், பிற இடர்பாடுகள் மற்றும் ஆபத்தில் உள்ள இளைஞர்களுக்கு உதவுதல் போன்றவற்றிற்காக செலவிடப்படவுள்ளது.

மேலும், 13.5 மில்லியன் டொலர்கள் பொலிஸ் மற்றும் பிற அமுலாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

மேயர் ஜோன் டோரி மற்றும் பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சாண்டர்ஸ் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக, சமீபத்திய துப்பாக்கி வன்முறைகளை வெகுவாக குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This Post

Post Comment